search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கலெக்டர் அலுவலகத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    மக்கள் அதிகம் கூடும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை ஆம்புலன்ஸ் வசதி மிகவும் அவசியம்.
    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது. 

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள்  தங்களது கோரிக்கை மற்றும் புகாரை தெரிவிக்க கலெக்டர் அலுவலகம் வருகின்றனர். ஒவ்வொரு வாரமும் 500 பேர் வரை கலெக்டர் அலுவலகம் வந்து செல்கின்றனர். சில நேரம் 800 பேர் வரை வந்து செல்கின்றனர். 

    மக்கள் அதிகம் கூடும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை ஆம்புலன்ஸ் வசதி மிகவும் அவசியம். கடந்த திங்கட்கிழமை பொதுமக்கள் குறைகேட்பு முகாமில் மனு கொடுக்க வந்தவர் திடீரென மயங்கி விழும் நிலையில் மீட்கப்பட்டார். 

    உடன் வந்திருந்தவர்கள் மயங்கிய நிலையில் உள்ளவரை பார்த்து பதட்டமாகி காரை வரவழைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    இதுபோன்ற நேரத்தில் தேவையான முதலுதவி செய்ய வசதியாக 108 ஆம்புலன்சை மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தின் போது தயாராக நிறுத்தி வைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
    Next Story
    ×