என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கே.டி.எல்., - வேடப்பட்டி சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்
Byமாலை மலர்22 Sep 2021 4:26 AM GMT (Updated: 22 Sep 2021 4:26 AM GMT)
பல ஆண்டு பயன்பாட்டினால் பல இடங்களில் சேதமடைந்திருந்த இந்த சாலையை அகலம் செய்து புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மடத்துக்குளம்;
மடத்துக்குளம் தாலுகா துங்காவியில் இருந்து வேடபட்டி நால்ரோடு வரை 6 கி.மீ., நீளத்தில் மாநில சாலை உள்ளது. இந்த இடத்திலிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் கே.டி.எல்., பகுதியில் தேசிய நெடுஞ்சாலையுடன் இந்த சாலை இணைகிறது.
மலையாண்டிபட்டிணம், ஜோத்தம்பட்டி, செங்கன்டிபுதூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமமக்களும், உடுமலை - தாராபுரம் சாலையில் இருந்து மடத்துக்குளத்துக்கு வரும் பயணிகளும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.
மடத்துக்குளம் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்பாராதவிதமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் போது உடுமலை, தாராபுரம் மற்றும் இதர பகுதிகளுக்குச் செல்ல கே.டி.எல்.,- வேடப்பட்டி சாலை மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்படுகிறது.
தினமும் பல நூறு வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலை 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்துக்கும், வாகனப் பயன்பாட்டுக்கும் தகுந்தபடி அமைக்கப்பட்டது.
பல ஆண்டு பயன்பாட்டினால் பல இடங்களில் சேதமடைந்திருந்த இந்த சாலையை அகலம் செய்து புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் கடந்த ஆண்டு துங்காவியிலிருந்து வேடப்பட்டி வரை தேவையான இடங்களில் சாலையை அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டது.
தற்போது வேடபட்டி நால்ரோட்டிலிருந்து இரண்டு கி.மீ., தொலைவிலுள்ள கே.டி.எல்., வரை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடக்கிறது.
Next Story
×