என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  உடுமலை குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆக்கிரமிப்புகளால் நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
  உடுமலை:

  உடுமலை அருகே அடுக்கு தொடராக அமைந்துள்ள பாசன திட்ட குளங்களுக்கு அரசாணை அடிப்படையில் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு குளங்கள் நிரப்பபடுகின்றன.

  திட்டத்திலுள்ள ஒட்டுக்குளம், பெரியகுளம், செங்குளம், செட்டிக்குளம், தினைக்குளம், கரிசல்குளம், அம்மாபட்டி குளம், வலையபாளையம் ஆகிய குளங்கள் வாயிலாக 2,786 ஏக்கர் நேரடி பாசனமும், பல ஆயிரம் ஏக்கர் நிலத்தடி நீர் மட்டம் பாதுகாக்க உதவியாக உள்ளது.

  இக்குளங்களின் நீர் தேக்க பரப்பை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதுடன், கரைகளிலும் நீர் வரத்து ஓடைகளிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகிறது.

  இத்தகைய ஆக்கிரமிப்புகளால் நேரடி பாசனம் பெறும் விளைநிலங்களின் நீர் நிர்வாகத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. நீர் தேக்க பரப்பும் படிப்படியாக குறைந்து கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டு வருகிறது.

  பருவமழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஏழு குளங்களில் நிரப்பபடும் தண்ணீரை அடிப்படையாக கொண்டே அப்பகுதியில் கரும்பு, தென்னை உட்பட சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

  நீர்தேக்க பரப்பு ஆக்கிரமிக்கப்படுவதால் குளத்தில் தண்ணீர் தேக்கப்படுவது பாதிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து வருகிறது. இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக குளங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×