என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அருகே செல்போன் கடைக்குள் புகுந்துரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு - கேமராவில் பதிவான கொள்ளையர்களுக்கு வலைவீச்சு
Byமாலை மலர்21 Sep 2021 10:28 AM GMT (Updated: 21 Sep 2021 10:28 AM GMT)
இன்று காலை சென்று பார்த்த போது கடையில் இருந்த 10 ஆன்டிராய்டு செல்போன்கள், லேப் டாப், பழைய போன்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது.
திருப்பூர்:
திருப்பூர் அருகே உள்ள சென்னிமலை பாளையத்தை சேர்ந்தவர் ருத்ரமூர்த்தி (வயது 23) . இவர் அதே பகுதியில் செல்போன் மற்றும் லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு அவர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
இன்று காலை சென்று பார்த்த போது கடையில் இருந்த 10 ஆன்டிராய்டு செல்போன்கள், லேப்டாப், பழைய போன்கள் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனால் இரவு கடையை பூட்டி விட்டு சென்றதும் நள்ளிரவு கடைக்குள் புகுந்த மர்மநபர்கள் செல்போன்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்ட போது 2 மர்ம நபர்கள் அதிகாலை 2.30 மணியளவில் கடைக்குள் புகுந்து செல்போன் உள்ளிட்டவற்றை திருடி சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது.
மேலும் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் போலீசில் சிக்காமல் இருக்க கேமரா ஹார்டு டிஸ்க்கையும் கழற்றி சென்றுள்ளனர். ஆனால் ஒரு பகுதி டிஸ்க்கை விட்டு சென்றுள்ளனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். இதுகுறித்து ருத்ரமூர்த்தி பல்லடம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், சி.சி.டி.வி.கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவத்தை வைத்து அவர்களை தேடி வருகின்றனர். மேலும் கடையில் மர்மநபர்கள் கொள்ளையடிக்கும் கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
×