என் மலர்

  செய்திகள்

  திருட்டு
  X
  திருட்டு

  மெலட்டூர் அருகே கோவில் கேட் உடைத்து நகைகள் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகலூர் பகுதியில் கடந்த வாரம் நகை கடை பூட்டை உடைத்து 52 கிராம் தங்க நகைகள் திருட்டு போனநிலையில் மீண்டும் அதே பகுதியில் கோவில் நகைகள் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  மெலட்டூர்:

  பாபநாசம் தாலுக்கா, மெலட்டூர் அருகே உள்ள நாகலூர் கிராமத்தில் வி‌ஷமீண்ட மாரியம்மன் கோவில் உள்ளது சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் யாரோ கோவில் கிரில் கேட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் தங்க தாலியை திருடி சென்றுவிட்டனர்.

  காலையில் கிரில் கேட்டைஉடைத்து அம்மன் கழுத்தில் இருந்த தாலிமணி கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் இதுகுறித்து மெலட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மெலட்டூர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் மற்றும் போலீசார் கொள்ளை நடந்த மாரியம்மன் கோவிலை நேரில் பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் சாமி நகையை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

  Next Story
  ×