என் மலர்

  செய்திகள்

  மனுதாக்கல் செய்த திமுக வேட்பாளர் கனிமொழி
  X
  மனுதாக்கல் செய்த திமுக வேட்பாளர் கனிமொழி

  மாநிலங்களவை எம்.பி.தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மனுதாக்கல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சட்டசபையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தி.மு.க. வேட்பாளர்களான டாக்டர் கனிமொழி, கே. ஆர்.என்.ராஜேஷ்குமார் இருவரும் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.
  சென்னை:

  டெல்லி மேல்-சபையில் தமிழ்நாட்டுக்கு 18 எம்.பி. பதவிகள் உள்ளன. அ.தி.மு.க. எம்.பி.க்களாக இருந்த கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனதால் தங்களது எம்.பி. பதவியை ராஜினாமா செய்திருந்தனர். இதனால் அந்த 2 இடங்கள் காலியாக இருந்து வந்தது.

  இந்த இடங்களுக்கு அடுத்த மாதம் 4-ந்தேதி தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

  இந்த பதவிகளுக்கு தி.மு.க. வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று தி.மு.க. தலைவரான முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

  இதையொட்டி டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் ஆகிய இருவரும் இன்று மதியம் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் சட்டசபை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

  மனுதாக்கல் செய்துள்ள டாக்டர் கனிமொழி முன்னாள் மத்திய மந்திரி என்.வி.என்.சோமுவின் மகள். மருத்துவரான இவர் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.

  கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் நாமக்கல் கிழக்கு தி.மு.க. மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

  சட்டசபையில் தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளதால் தி.மு.க. வேட்பாளர்களான டாக்டர் கனிமொழி, கே. ஆர்.என்.ராஜேஷ்குமார் இருவரும் போட்டியின்றி வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

  கே.பி.முனுசாமி


  அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த கே.பி.முனுசாமி இடத்துக்கு டாக்டர் கனிமொழி தேர்வு செய்யப்படுகிறார். அவரது பதவி காலம் இன்னும் 4 வருடம் 2 மாதங்கள் உள்ளது.

  அ.தி.மு.க. எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம் இடத்துக்கு கே.ஆர்.என்.ராஜேஷ் குமார் தேர்வு செய்யப்படுகிறார். அவரது பதவி காலம் இன்னும் 8 மாதமே உள்ளது.

  இதையும் படியுங்கள்...  விமானத்தில் நாயை அழைத்து வர பெண் செய்த காரியம்
  Next Story
  ×