search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    சென்னையில் 864 தெருக்களில் மட்டும் கொரோனா பாதிப்பு

    கொரோனா தொற்று பாதிப்புள்ள 15 மண்டலங்களில் அதிகபட்ச பாதிப்பாக தேனாம்பேட்டை மண்டலம் உள்ளது. அங்கு 144 தெருக்களில் தொற்று பரவியுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று ஏறி-இறங்கி வருகிறது. நேற்று முன்தினம் 1,697 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அது நேற்று 1,661 ஆக குறைந்தது.

    சென்னை, கோவை மாவட்டங்களில் தொற்று பாதிப்பு 200-க்கு மேல் உள்ளது. இதனால் சென்னையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படுகிறது.

    கடந்த 19-ந்தேதி புள்ளி விவரங்களின்படி சென்னையில் உள்ள 39,537 தெருக்களில் 864 தெருக்களில் மட்டுமே தொற்று பரவியுள்ளது. 38,673 தெருக்கள் இந்த பாதிப்பில் இருந்து விலகி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.

    1,786 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்புள்ள 15 மண்டலங்களில் அதிகபட்ச பாதிப்பாக தேனாம்பேட்டை மண்டலம் உள்ளது. அங்கு 144 தெருக்களில் தொற்று பரவியுள்ளது.

    கொரோனா வைரஸ்


    அடுத்ததாக கோடம்பாக்கத்தில் 90 தெருக்களும், அடையாறில் 74, ஆலந்தூரில் 68, அம்பத்தூரில் 63, மாதவரத்தில் 57, தண்டையார்பேட்டை, ராயபுரத்தில் தலா 50 தெருக்களிலும் பாதிப்பு உள்ளது.

    3 பேருக்கு குறைவாக பாதிப்பு உள்ள தெருக்களாக 747 உள்ளன. 3 பேருக்கு அதிகமாக பாதித்த தெருக்களாக 117-ம், 4 பேருக்கு அதிகமாக பாதித்த தெருக்களாக 67-ம், 5 பேருக்கு அதிகம் பாதித்த தெருக்களாக 22-ம் உள்ளன.

    10 மண்டலங்களில் மட்டும் 5 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட தெருக்கள் உள்ளன. இதில் அடையாறில் 5 தெருக்களும், தேனாம்பேட்டையில் 4 தெருக்களும், திருவொற்றியூர், அண்ணாநகர், கோடம்பாக்கம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தலா 2 தெருக்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

    மாதவரம், ராயபுரம், அம்பத்தூர் மண்டலங்களில் தலா ஒரு தெருக்களில் தொற்று பரவியுள்ளது. மணலி, தண்டையார்பேட்டை, திரு. வி.க.நகர், வளசரவாக்கம், பெருங்குடி ஆகிய 5 மண்ட லங்களில் 5 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட தெருக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×