search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    போதையால் பி.ஏ.பி., வாய்க்காலில் மூழ்கி பலியாகும் குடிமகன்கள் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

    தற்போது பி.ஏ.பி., வாய்க்காலை குடிமகன்கள் பலர் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் பி.ஏ.பி., வாய்க்காலில் தண்ணீரின் வேகம் அதிகம் என்பதால் குளிக்க வருபவர்கள் பலர் தண்ணீரில் மூழ்கி பலியாவது தொடர் கதையாகி உள்ளது. 

    தண்ணீர் திறந்த ஒரே மாதத்திற்குள் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்களின் உடல்கள் பி.ஏ.பி., வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இதில் நீச்சல் தெரியாதவர், போதையில் வாய்க்காலில் குளித்தவர்கள், துணி துவைக்க வந்தவர்கள் என பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். 

    தற்போது பி.ஏ.பி., வாய்க்காலை குடிமகன்கள் பலர் திறந்தவெளி பாராக பயன்படுத்துகின்றனர். ஆசை தீர குடிக்கும் குடிமகன்கள் பின்னர் வாய்க்காலில் இறங்கி குளிக்கின்றனர். இவர்களில் பலர் தண்ணீரில் மூழ்கி இறக்கின்றனர்.

    உயிரிழப்புகள் அதிகரித்ததால் பி.ஏ.பி.,யில் யாரும் குளிக்க கூடாது என்று பல இடங்களில் போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். 

    ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை. உயிர் இழப்பு ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்க போலீசார் வாய்க்காலில் குளிப்பவர்கள், வாய்க்காலுக்கு வரும் குடிமகன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    Next Story
    ×