search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் குடிநீர் வினியோகம் பாதிப்பு

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 15 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
    திருப்பூர்:

    தமிழ்நாடு குடிநீர் வினியோகம் மற்றும் வடிகால் வாரிய ஊழியர் சங்க (சி.ஐ.டி.யு.,), 40ம் ஆண்டு மகாசபை கூட்டம் திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டையில் நடந்தது. சங்க தலைவர் ஆத்மநாதன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 15 கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஒப்பந்த ஊழியருக்கு குடிநீர் வடிகால் வாரியம் நிர்ணயித்துள்ள சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை.

    சம்பளத்துக்கு முறையாக இ.பி.எப்., செலுத்துவதில்லை. இ.எஸ்.ஐ., அட்டை முழுமையாக வழங்கப்படவில்லை. ஒப்பந்ததாரர்களுடன் அதிகாரிகள் கூட்டு சேர்ந்து முறைகேடு நடந்து வருகிறது. முறைகேட்டை தடுத்து நிறுத்த வேண்டிய வாரிய உயர் அதிகாரிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.

    கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட மண்டல, வட்ட, கோட்ட அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் அதிகப்படியான பணியிடங்கள் நிரப்பப்படாததால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
    Next Story
    ×