search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணியிடை நீக்கம்
    X
    பணியிடை நீக்கம்

    நகைக்கடன் வழங்கியதில் ரூ.2 கோடி முறைகேடு- 2 பேர் பணியிடை நீக்கம்

    குரும்பூர் கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கியதில் ரூ.2 கோடி முறைகேடு தொடர்பாக செயலாளர் உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
    தென்திருப்பேரை:

    கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அந்த வங்கியில் நகைகளை அடமானம் வைக்காமலேயே 261 பேருக்கு மொத்தம் ரூ.2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 முறைகேடாக வழங்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சில வாடிக்கையாளர்களின் சேமிப்பு தொகையும் முறையாக வரவு வைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

    இது தொடர்பாக அங்கமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் நாலுமாவடி முருகேச பாண்டியன் தற்காலிகமாக நீக்கப்பட்டார். துணைத்தலைவர் பரிசமுத்து, தலைவர் பொறுப்பை கவனித்து வருகிறார்.

    மேலும் வங்கி செயலாளர் திருச்செந்தூர் தேவராஜூ, துணை செயலாளர் குரும்பூர் ஜான்சி சந்திரகாந்தா ஞானபாய் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    கூட்டுறவு வங்கியில் முறைகேடு நடந்ததை அறிந்த வாடிக்கையாளர்கள் தாங்கள் அடமானம் வைத்த நகைகள் மற்றும் சேமிப்புத்தொகை பத்திரமாக உள்ளதா? என்பதை அறிவதற்காக வங்கியில் திரண்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×