search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சலுகை தொகைகளை பெறுவதற்கு ஏற்றுமதி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

    நிலுவை சலுகைகளை பெற ஏற்றுமதி நிறுவனங்கள் வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    ஏற்றுமதியாளர்களுக்கு சலுகை நிலுவைத்தொகை 56 ஆயிரத்து 27 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

    மெர்ச்சன்டைஸ் எக்ஸ்போர்ட் இந்தியா ஸ்கீம் திட்டத்தில் ரூ.33,010 கோடி, சர்வீஸ் எக்ஸ்போர்ட்ஸ் பிரம் இந்தியா திட்டத்தில் ரூ.10,002 கோடி, வரிகளை திரும்ப பெறும் திட்டத்தில் ரூ.8,184கோடி, இதர திட்டங்களுக்கு ரூ. 4,831 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 

    நிலுவை சலுகைகளை பெற ஏற்றுமதி நிறுவனங்கள் வரும் டிசம்பர் 31-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து நிலுவை சலுகை தொகைகளை பெற வேண்டும் என ஏற்றுமதியாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.
    Next Story
    ×