search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    தொண்டி அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியல்

    தொண்டி அருகே சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி தனியார் ஆலைக்கு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    தொண்டி

    தொண்டி அருகே உள்ள மச்சூர் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மீன் அரைக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இதனால் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் ஒடவயல் விலக்கு பகுதியில் தொழிற்சாலைக்கு சென்ற கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அங்கு கூடியிருந்தவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினை தொடர்பாக வட்டானம் ஊராட்சி அலுவலகத்தில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர் தலைமையிலும் திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு சின்னக்கண்ணு முன்னிலையிலும் சமாதான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மச்சூரிலுள்ள ஆலையை சுற்றியுள்ள கிராமங்களுக்கு எந்தவித சுகாதார கேடும் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தற்போது இந்த ஆலைக்கு வரும் வாகனங்கள் ஒடவயல், மச்சூர் பாதையில் தற்காலிகமாக செல்ல அனுமதிப்பது என்றும் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஆலை இயங்கக்கூடாது என்றும் மீன் இறக்கிய வாகனங்கள் செல்லக்கூடாது எனவும் முடிவு செய்யப்பட்டது

    இதில் தாசில்தார் சாந்தி, தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், புல்லூர் வருவாய் ஆய்வாளர் புல்லாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் நம்புராஜேஷ், ராதா, மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஒடவயல் போஸ், ஒன்றிய கவுன்சிலர் சிவ சங்கீதாராஜாராம், முன்னாள் ஊராட்சி தலைவர் பிரேமா கணேசன் உள்பட கிராம முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×