search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சின்ன வெங்காயம்.
    X
    சின்ன வெங்காயம்.

    குண்டடம் பகுதியில் சின்ன வெங்காயம் அறுவடை பணிகள் தீவிரம் - விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ. 40முதல் ரூ. 55வரை கொள்முதல் செய்யப்பட்டது.
    குண்டடம்:

    குண்டடம், உடுமலை, தாராபுரம், பல்லடம், பொங்கலூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளின் பணப்பயிராகக் கருதப்படும் சின்ன வெங்காயம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 

    இந்தப் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு திண்டுக்கல், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, கோவை, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் மலேசியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த வைகாசி, ஆனி மாதங்களில் நடவு செய்யப்பட்ட வெங்காயம் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை 1 கிலோ சின்ன வெங்காயம் ரூ. 40முதல் ரூ. 55வரை கொள்முதல் செய்யப்பட்டது. 

    தற்போது விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. விளைச்சல் நன்றாக உள்ள வெங்காயம் கிலோ ரூ. 30வரை கொள்முதல் செய்யப்படுகிறது. சுமாரான விளைச்சல் உள்ள வெங்காயம் கிலோ ரூ.20முதல் ரூ. 30வரை கொள்முதல் செய்யப்படுகிறது. 

    ஏக்கர் ஒன்றுக்கு கோழி எரு, உழவு செலவு, பார் செலவு, விதைக்காய், நடவு கூலி, உரம், பூச்சி மருந்து, களையெடுத்தல், அறுவடை என ரூ. 60ஆயிரம் வரை செலவாகிறது. 

    நடப்பு சீசனில் ஏக்கருக்கு 5டன் வரையே மகசூல் கிடைத்ததாகவும், அதிலும் வெங்காயம் சிறியது, பெரியதாக விளைந்ததால் 1 கிலோ ரூ. 15-லிருந்து ரூ.20 க்குள்ளேயே கொள்முதல் செய்யப்படுகிறது. அதை வாங்க கூட வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர்.  
    Next Story
    ×