search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்.
    X
    நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்.

    அவினாசி அரசு கல்லூரியில் சமூக நீதி நாள் நிகழ்ச்சி

    நிகழ்ச்சியில் அனைத்து மாணவர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
    அவினாசி:

    அவினாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணைய வழி மூலம் சமூக நீதி நாள் மற்றும் சர்வதேச தண்ணீர் கண்காணிப்பு தினம், உலக மூங்கில் தின நிகழ்ச்சி நடைபெற்றது.  விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் வரலாற்றுத்துறை பேராசிரியர் முனைவர் சி.ஜெயவீர தேவன் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழகத்தில் சமூக நீதி நிலவ பெரியார் ஆற்றிய பெரும் தொண்டினை பற்றி கூறினார். அனைத்து மாணவர்களும் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.மாணவர் ஆனந்த் வரவேற்றார்.  

    சர்வதேச நீர் கண்காணிப்பு தினம் மற்றும் உலக மூங்கில் தின நிகழ்ச்சியில் அவிநாசி விழுதுகள் அறக்கட்டளை இயக்குனர் தங்கவேல் கலந்து கொண்டு நீர் மேலாண்மை, நிலத்தடி நீர் வறட்சியை நாம் சரி செய்ய வேண்டியதன் அவசியம், காலநிலை மாற்றம், அதனை சரிசெய்ய மூங்கில் மரங்களின் தேவை குறித்தும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வோடு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார். 

    நீரினை எவ்வாறு சேமித்தல், மழை நீர் சேகரிப்பின் அவசியம், நகரமயமாதலை போலவே மரங்களின் தேவையும் அவசியம் என்று எடுத்துரைத்தார்.

    ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சூலூரை சேர்ந்த எம்.முருகன் பேசுகையில்:

    100 மூங்கில் மரங்களை கல்லூரி வளாகத்தில் நடவிருப்பதாகவும் அதற்கான பணிகளை செய்து தருவதாகவும் கூறினார். நிகழ்ச்சியில் முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா வரவேற்றார். ரட்ச்சனா விருந்தினரை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை வணிக துறைத்தலைவர் பாலமுருகன் செய்திருந்தார்.  
    Next Story
    ×