search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இ-ஷ்ராம் தளத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டுகோள்

    திருப்பூரில் பதிவு பணியை செயல்படுத்துவதற்காக கலெக்டர் தலைமையில் துறை சார் அலுவலர்களை உள்ளடக்கி மாவட்ட அளவிலான செயல்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.
    திருப்பூர்:

    இ-ஷ்ராம் தளத்தில் அமைப்புசாரா தொழிலாளர் பதிவு தொடக்க விழா திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் வினீத் பதிவை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

    தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) மலர்க்கொடி, திருப்பூர் மாவட்ட பொதுசேவை மைய மேலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். அமைப்பு சாரா தொழிலாளர்கள்  இலவசமாக பதிவு செய்வதற்காக இ-ஷ்ராம் தளத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது.   

    அமைப்புசாரா தொழிலாளரை கண்டறிந்து நலத்திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இதை செயல்படுத்துகிறது.

    இந்த தளத்தில் பொது சேவை மையங்கள் மூலம் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணி, மாநகரவளர்ச்சிப்பணி, தெருவோர வியாபாரிகள், ரிக்ஷா ஓட்டுனர்கள், கட்டுமான தொழிலாளர், வீட்டு பணியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள், விவசாய தொழிலாளர், மீனவர், செங்கல் சூளை தொழிலாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    ஏற்கனவே தமிழ்நாடு அமைப்பு சாரா உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் மற்றும் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்றவர்களாகவும், இ.எஸ்.ஐ., பி.எப்., பிடித்தம் செய்யப்படுபவர்களாக இருக்க கூடாது. இ-ஷ்ராம் தளத்தில் பதிவு செய்வதற்கு ஆதார் அட்டை, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் தேவை. 

    திருப்பூரில் இப்பதிவு பணியை செயல்படுத்துவதற்காக கலெக்டர் தலைமையில் துறை சார் அலுவலர்களை உள்ளடக்கி, மாவட்ட அளவிலான செயல்படுத்துதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    தகுதியுள்ள அமைப்புசாரா தொழிலாளர் அனைவரும் அருகிலுள்ள பொதுசேவை மையத்தை அணுகி இத்திட்டத்தின்மூலம், இ-ஷ்ராம் தரவு தளத்தில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.  
    Next Story
    ×