என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  பட்டுக்கோட்டையில் மருந்து கடையில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பட்டுக்கோட்டையில் மருந்து கடையில் பெண்ணிடம் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பட்டுக்கோட்டை:

  பட்டுக்கோட்டை சுண்ணாம்பு கார தெருவை சேர்ந்தவர் ராமன் மகன் விக்கி (எ) கலியமூர்த்தி (வயது 22), இவர் ஒரத்தநாடு அருகே செல்லம்பட்டி பாலத்தில் உள்ள மருந்து கடைக்கு நண்பருடன் சென்று மாத்திரை கேட்டுள்ளார். கடையில் வேலை பார்த்த பெண் மாத்திரையை எடுத்து கொடுத்தார்.

  அப்போது வேறு மாத்திரையை விக்கி கேட்டதால் அந்த பெண் கையில் இருந்த செல்போனை டேபிளில் வைத்து விட்டு மாத்திரை எடுத்த போது விக்கி செல்போனை திருடிக் கொண்டு ஓடியுள்ளார்.இதனைக்கண்டு அந்த பெண் சத்தம்போட அருகில் உள்ளோர் விரட்டிசென்றும் இருவரையும் பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஒரத்தநாடு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் தனிப்படை சப்-இன்ஸ் பெக்டர் பிரேசில் பிரேம் ஆனந்த் செல்போன் டவர் மூலம் பட்டுக்கோட்டையில் விக்கி என்கிற கலியமூர்த்தியை கைது செய்தனர்.

  அவரிடமிருந்து 19 கிலோ கஞ்சா, மற்றும் 2 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 4 மணி நேரத்தில் திருடனை தனிப்படை எஸ்.ஐ. கைது செய்தது. மேலும் தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளியை தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  Next Story
  ×