என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  பல்லடத்தில் தீயில் கருகிய தொழிலாளி சாவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சமீபகாலமாக மாணிக்கம் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
  பல்லடம்:

  மடத்துக்குளம் அருகே உள்ள நரசிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 38). இவர் பல்லடத்தில் உள்ள பெரியார் நகரில் வாடகை வீட்டில் மனைவி துர்க்கை அம்மாளுடன் வசித்து கொண்டு, கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

  இந்தநிலையில், சமீபகாலமாக குடிப்பழக்கத்துக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 12-ந்தேதி  ஏற்பட்ட தகராறில் துர்க்கை அம்மாள் கோபித்து கொண்டு வீட்டை விட்டு சென்றார்.

  இதனால் மனமுடைந்த  மாணிக்கம் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

  அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×