search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிரதமரின் விளம்பர பதாகை சேதம்: தளவாபாளையத்தில் பா.ஜனதாவினர் சாலைமறியல்

    பிரதமரின் விளம்பர பதாகையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி தளவாபாளையத்தில் பா.ஜனதாவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
    நொய்யல்:

    பிரதமர் மோடியின் 71-வது பிறந்தநாளையொட்டி பா.ஜனதா சார்பில் தளவாபாளையம் பஸ் நிறுத்தம் அருகே மரக்கன்றுகள் நடும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி பிரதமர் மோடியின் படத்துடன் கூடிய வாழ்த்து விளம்பர பதாகை வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு விளம்பர பதாகையில் இருந்த பிரதமர் மோடியின் படத்தை மர்ம ஆசாமிகள் பிளேடால் கிழித்து சேதப்படுத்தி இருந்தனர்.

    நேற்று காலை இதைக்கண்ட பா.ஜனதாவினர் சம்பவ இடத்திற்கு திரண்டனர். தொடர்ந்து விளம்பர பதாகையை சேதப்படுத்திய மர்ம ஆசாமிகளை கைது செய்யக்கோரி மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் தளவாபாளையம் பஸ்நிறுத்தம் அருகே பா.ஜனதாவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரமத்தி வேலூரில் இருந்து கரூர் செல்லும் வாகனங்களும், கரூரிலிருந்து பரமத்திவேலூர் செல்லும் வாகனங்களும் தளவாபாளையம் பகுதியில் அணிவகுத்து நின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் இன்ஸ்பெக்டர் ரமாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலைமறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் புகார் அளித்தால் விளம்பர பதாகையை சேதப்படுத்தியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பா.ஜனதாவினர் சாலைமறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதையடுத்து, கரூர் மேற்கு ஒன்றிய தலைவர் கோபிநாத் தலைமையில் தொழிற்பிரிவு ஒன்றிய தலைவர் முருகேசன் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×