search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தை - 20 ந்தேதிக்கு ஒத்திவைப்பு

    தொழிற்சங்கம் தரப்பு நடப்பில் இருந்து 90 சதவீத சம்பள உயர்வு கேட்கின்றனர். 28 சதவீதம் வரை உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கங்கள் சம்மதித்துள்ளன.
    திருப்பூர்:

    திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக ஆடை உற்பத்தியாளர் சங்கம் - தொழிற் சங்கங்களிடையே ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

    ‘சைமா’, ஏற்றுமதியாளர் சங்கம், ‘டீமா’, ‘நிட்மா’, ‘சிம்கா’, ‘டெக்மா’ ஆகிய உற்பத்தியாளர் சங்கங்கள், ஏ.ஐ.டி.யு.சி., சி.ஐ.டி.யு., - ஐ.என்.டி.யு.சி., எம்.எல்.எப்., - எச்.எம்.எஸ்., - பி.எம்.எஸ்., - எல்.பி.எப்., -அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் இதில் அங்கம் வகிக்கின்றன.

    இதுவரை 6 சுற்று பேச்சுவார்த்தை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கம் தரப்பு நடப்பில் இருந்து 90 சதவீத சம்பள உயர்வு கேட்கிறது. 28 சதவீதம் வரை உயர்வு வழங்க உற்பத்தியாளர் சங்கங்கள் சம்மதித்துள்ளன. 

    தொழிற்சங்கங்கள் இந்த உயர்வை ஏற்காததால் நேற்று 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது. தவிர்க்கமுடியாத காரணங்களால் நேற்று பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. நாளை மறுநாள் 20-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்று மாலை 5 மணிக்கு ‘சைமா’ சங்க அரங்கில் 7-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதுகுறித்து பேச்சு வார்த்தையில் பங்கேற்றுள்ள உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×