என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சித் தேர்தல் - இதுவரை 13,542 பேர் வேட்புமனு தாக்கல்
Byமாலை மலர்17 Sep 2021 6:07 PM GMT (Updated: 17 Sep 2021 6:07 PM GMT)
9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்று 8,567 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
சென்னை:
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் 15-ம் தேதி தொடங்கி செப்டம்பா் 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 9 மாவட்டங்களில் கடந்த 3 நாள்களில் 13,542 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனா்.
3-வது நாளான இன்று கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 7,208 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 1,212 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 135 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 12 பேரும் என மொத்தம் 8,567 பேர் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா்.
இதையும் படியுங்கள்... உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடக்கூடாது- மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
Next Story
×