என் மலர்

  செய்திகள்

  விஜய் வசந்த் எம்.பி.
  X
  விஜய் வசந்த் எம்.பி.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது: விஜய் வசந்த் எம்.பி. பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம், ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஹெலிஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என விஜய் வசந்த் எம்.பி. தெரிவித்துள்ளார்.
  குமரி மகாசபை கூட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த இலவுவிளை மார் எப்ரோம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாநில  தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,  கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், ஆகியோருக்கு கல்லூரி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

  பின்னர் நடைபெற்ற  குமரி மகாசபை நிர்வாகிகள்  கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சி குறித்த உறுதிமொழி கடைபிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு டாக்டர். சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். டாக்டர். அருண் பிரகாஷ் , டாக்டர் அகஸ்டின் ஆகியோர் வரவேற்றனர். 
  குமரி மகாசபை அமைப்பு சார்பில் குமரி மாவட்ட வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டதோடு விமான நிலையம், சுற்றுலா மேம்பாடு, தொழில்நுட்ப பூங்கா , புதிதாக  நவோதயா பள்ளி ,கேந்திர வித்யாலயா பள்ளி அமைத்தல் மற்றும் சாலை அடிப்படை வசதிகள் போன்ற வளர்ச்சிக்கான மேம்பாடுகள் குறித்து கோரிக்கை வைத்ததோடு, அதுகுறித்து விவாதமும் நடைபெற்றது.

  இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

  கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்ன விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் ஹெலிகாப்டர் தளம் மற்றும் ஹெலிஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தலங்களை நவீனப்படுத்த கடல் சார்ந்த பகுதிகள் மட்டும் இன்றி மலை சார்ந்த பகுதிகளையும் நவீனப்படுத்தி  சுற்றுலாப் பயணிகளை கவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  நவோதயா பள்ளி  குமரிமாவட்டத்தில் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேந்திர வித்யாலயா பள்ளி மார்த்தாண்டம் அல்லது குழித்துறையை மையமாக வைத்து  தொடங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் டெக்னோபார்க் என்னும் தகவல் தொழில்நுட்ப பூங்கா தொடங்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகமான வழக்கறிஞர்கள் இருக்கின்றார்கள். ஆனால் சட்டக் கல்லூரி இல்லை. எனவே சட்டக் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்கள் அமைக்கவும், குமரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து முயற்சி செய்யவேண்டும்

  இவ்வாறு விஜய்வசந்த் பேசினார்.

  மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார்க்பவுலோஸ், வெள்ளிமலை சுவாமிஜி கருணானந்தா மஹராஜ் ஜி, நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவி தாரகை கத்பர்ட், மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் பால்மணி, லாரன்ஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பேசினர்.

  விஜய் வசந்த் எம்.பி.

  விஜய்வசந்த்  எம்.பி. இன்று நாகர்கோவில் நகரில் நடைபெற்று வரும் சாலை பராமரிப்பு பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
  Next Story
  ×