என் மலர்

  செய்திகள்

  அபராதம்
  X
  அபராதம்

  சீராப்பள்ளி பேரூராட்சியில் கொரோனா விதிகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு அபராதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சீராப்பள்ளி பேரூராட்சியில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
  ராசிபுரம்:

  கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாமக்கல் மாவட்டத்தில் முககவசம் அணியாதவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்குமாறு கலெக்டர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

  அதன்படி ராசிபுரம் தாலுகா சீராப்பள்ளி பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் செயல் அலுவலர் அண்ணாமலை தலைமையில் 4 குழுவினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கரத்தில் சென்றவர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர். மேலும் வணிக நிறுவனங்கள், மளிகைக்கடை, டீக்கடை மற்றும் ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காத 6 கடைகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
  Next Story
  ×