search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட ஐம்பொன் சாமி சிலை.
    X
    மீட்கப்பட்ட ஐம்பொன் சாமி சிலை.

    திருப்பூர் கோவிலில் ஐம்பொன் சாமி சிலைகளை திருடிய பனியன் நிறுவன தொழிலாளி கைது

    சிலை கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு சிலைகள் மற்றும் பணத்தை மீட்ட வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.
    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி  ஜே.ஜே.நகர் 2-வது வீதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. இந்த கோவில் கருவறைக்குள் ஒரு பெட்டியில்7 சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதில் சிவலிங்கேஸ்வரர், காசி விசுவநாதர், ஏழுமலையான் ஆகிய 3 ஐம்பொன் சிலைகளும், மற்ற 4 சிலைகளும் கல் சிலைகளாகும்.  

    இந்த நிலையில் ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டியின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் சிலைகளை திருடி சென்றனர். மேலும் சிலைக்கு அணிவிக்கும் தங்க ஆபரணங்கள் வைக்கப்பட்டிருந்த நகை பெட்டியும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 4 பவுன் நகையும் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து கோவில் கமிட்டி சார்பாக வீரபாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் அடிப்படையில் துணை கமிஷனர் வரதராஜன் உத்தரவின் பேரில் வீரபாண்டி இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ்குமார், அழகுராஜா மற்றும் போலீசார் சதீஷ், ரங்கராஜன் ஆகியோர் சம்பந்தப்பட்டகோவிலுக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.  

    கோவில் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டனர். அதில் மர்ம ஆசாமி ஒருவர் கோவில் பூட்டை உடைத்து கோவிலுக்குள் செல்வதும், பின்னர் ஐம்பொன்சிலை, நகைகள், உண்டியல் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து செல்வதும் பதிவாகி இருந்தது. 

    இதையடுத்து கொள்ளையனின் உருவத்தை வைத்து விசாரிக்கும் போது அவர்  வீரபாண்டி பகுதியை சேர்ந்த பனியன் நிறுவன தொழிலாளி மணி (வயது 39)  என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும்  அவரிடம் இருந்து 3 ஐம்பொன் சிலைகள், சிலைக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் 4 பவுன் மற்றும் உண்டியலில் இருந்த பணம் ரூ. 2 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.  

    சிலை கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு சிலைகள் மற்றும் பணத்தை மீட்ட வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா பாராட்டினார்.
    Next Story
    ×