search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் இறையன்பு
    X
    தலைமை செயலாளர் இறையன்பு

    ‘மெகா தடுப்பூசி முகாம்’- அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை

    ஒவ்வொரு மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்துகிறார்.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 12-ந்தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. 40 ஆயிரம் சிறப்பு முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது.

    ஆனால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். தமிழகம் முழுவதும் 28 லட்சம் பேர் ஒரே நாளில் தடுப்பூசி செலுத்திக் கொண்டது இந்திய வரலாற்றில் சாதனையாக பதிவாகி உள்ளது.

    இதனைத் தொடர்ந்து மெகா சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நடத்தவும் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. நாளை மறுநாள் (19-ந்தேதி) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதற்கான முன் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்துகிறார்.

    தடுப்பூசி முகாம்


    கடந்த வாரம் மிக சிறப்பாக நடத்தியது போல வருகிற நாட்களில் நடக்கின்ற முகாம்களில் மக்களை கொண்டு வந்து சேர்க்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும், எவ்வளவு தடுப்பூசிகள் தேவைப்படும் என்பது போன்ற விவரங்களையும் கேட்டறிகிறார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.


    Next Story
    ×