search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து, ஒரு சவரன் ரூ.34,920-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலை கடந்த மாதம் தொடர்ந்து அதிகரித்ததால் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை தாண்டியிருந்தது. அதன்பின் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது.

    சில நாட்களுக்கு பிறகு விலையில் தொடர்ந்து சரிவு காணப்பட்டதால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. இந்த மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலையில் ஏற்றத்தாழ்வு நிலவி வருகிறது.

    கடந்த வாரம் தங்கம் பவுன் மீண்டும் ரூ.36 ஆயிரத்தை நெருங்கி வந்தபோதும் விலை தொடர்ந்து குறைந்தபடி இருந்தது. நேற்று பவுனுக்கு ரூ.296 குறைந்து ரூ.35 ஆயிரத்து 320க்கு விற்றது.

    தங்கம்


    இந்த நிலையில் இன்று
    தங்கம்
    பவுன் ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.400 குறைந்தது. ஒரு பவுன் ரூ.34 ஆயிரத்து 920-க்கு விற்றது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.4,365-க்கு விற்பனை ஆனது.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1,500 குறைந்து ரூ.65 ஆயிரத்து 500 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.65.50-க்கு விற்கிறது.

    தங்கம் விலை இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் வந்துள்ளது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விலை தொடர்ந்து குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் அவர்களிடம் உள்ளது.


    Next Story
    ×