search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் நகை பறிப்பு

    விழுப்புரம் அருகே நேற்று நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வானூர்:

    விழுப்புரம் அருகே உள்ள கிளியனூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கோவடி கிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவில் கோவடி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் என்பவரது மனைவி பாஞ்சாலி (வயது 40) என்பவரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பாஞ்சாலியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம மனிதர்கள் பறித்து சென்றனர். பாஞ்சாலி அவரது கழுத்தில் இருந்த சங்கிலி திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    உடனே அவர் அங்கிருந்த போலீசாரிடம் நகை திருடு போன சம்பவம் குறித்து தெரிவித்தார். அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக சுற்றிதிரிந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    இதுகுறித்து கிளியனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் வழக்குபதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம மனிதர்களை வலைவீசி தேடிவருகிறார்.
    Next Story
    ×