என் மலர்

  செய்திகள்

  ஹெல்மெட் அணிந்து செல்வோர்
  X
  ஹெல்மெட் அணிந்து செல்வோர்

  ஹெல்மெட் அணிவோர் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை இருசக்கரவாகனங்களில் சென்று உயிரிழந்தவர்களில் 74 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
  சென்னை:

  சென்னை போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறி இருப்பதாவது:-

  சென்னையில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் கடந்த செப்டம்பர் 7-ந் தேதி வரை 659 பேர் விபத்தில் இறந்து விட்டனர். 3 ஆயிரத்து 325 பேர் விபத்தில் காயம் அடைந்துள்ளனர். இறந்தவர்களில் 26 சதவீதம் பேர் இருசக்கரவாகனத்தில் சென்றவர்கள் ஆவார்கள். அதுபோல காயம் அடைந்தவர்களில் 37 சதவீத பேரும் இரு சக்கரவாகனங்களில் சென்றவர்கள். இருசக்கரவாகனங்களில் சென்று உயிரிழந்தவர்களில் 74 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் என்று தெரியவந்தது.

  ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை பிடிக்கும் போலீசார்

  கடந்த ஜூன் மாதம் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில், 72 சதவீதம் பேர் மட்டுமே ஹெல்மெட் அணிந்து சென்றதும் கண்டறியப்பட்டது. அதன்பிறகு எடுக்கப்பட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் காரணமாக ஹெல்மெட் அணிபவர்களின் எண்ணிக்கை 86 சதவீதமாக அதிகரித்துள்ளது.

  இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Next Story
  ×