search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய்
    X
    விஜய்

    நடிகர் விஜய் சொகுசு காருக்கான நுழைவு வரியை செலுத்திவிட்டார்: தமிழக அரசு தகவல்

    நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும் என நடிகர் விஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், தற்போது வரியை செலுத்தியுள்ளார்.
    நடிகர விஜய் கடந்த 2012-ம் ஆண்டு பிரிட்டனில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். காருக்கான இறக்குமதி வரியை விஜய் செலுத்திவிட்டார். மேலும், நுழைவு வரி கட்ட வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    ஏற்கனவே இறக்குமதி வரி செலுத்திய நிலையில், நுழைவு வரி கட்ட வேண்டும் எனக் கூறியதால், அதை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வரும்போது, சென்னை உயர்நீதிமன்றம் விஜய் மீது கடுமையாக விமர்சனம் செய்த நிலையில் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதை எதிர்த்து விஜய் மேல்முறையீடு செய்தார். மேல்முறையீடு வழக்கில் அபராதம் செலுத்த கோர்ட் தடைவிதித்தது.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில், விஜய் நுழைவு வரியை செலுத்திவிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த விசாரணையின்போது விஜய் மீதான நுழைவு வரி வழக்கு முடிவுக்கு வர வாய்ப்புள்ளது.
    Next Story
    ×