search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்கள்.
    X
    வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் மருத்துவ பணியாளர்கள்.

    திருப்பூர் மாநகரில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை

    40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
    திருப்பூர்;
      
    மக்களை தேடிச்சென்று சிகிச்சை அளிக்கும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தமிழக அரசு தொடங்கியது. கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந்தேதி தொடங்கிய இத்திட்டத்தை, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

    இத்திட்டம் மூலம் மருத்துவ பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு தொற்றா நோய்களான சர்க்கரை நோய், புற்றுநோய், பக்கவாதம் உள்ளிட்ட நோய்களுக்கு  சிகிச்சை அளிக்கின்றனர்.  

    மேலும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது. இதன் மூலம் உடலில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவை கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  

    இத்திட்டத்தின் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6,107 நோயாளிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இத்திட்டம் முதியோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.  

    தற்போது திருப்பூர் மாநகராட்சி பகுதியில் மக்களை தேடி மருத்துவ திட்டம் மூலம் 80 பணியாளர்கள் ஒவ்வொரு வீடாக சென்று பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள். மாநகராட்சி பகுதியில் இத்திட்டத்தை திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ் தொடங்கி வைத்தார்.
    Next Story
    ×