search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பள்ளி மாணவர்கள்
    X
    பள்ளி மாணவர்கள்

    6 முதல் 8ஆம் வகுப்புகள் தொடங்குவது எப்போது?- வெளியான முக்கிய தகவல்

    மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டு முதல்வருக்கு அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கான பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    பள்ளிகள் திறப்பது குறித்து ஒவ்வொரு மாவட்ட கல்வி அதிகாரிகளும் ஒவ்வொரு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இதில் சிலர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும், மற்றும் சிலர் 5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த துறை சார்ந்த மூத்த அதிகாரிகளின் முடிவுகளும் முதல்வருக்கு தெரிவிக்கப்படும். அதன் அடிப்படையில் முதல்-அமைச்சர் பள்ளிகள் திறப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிடுவார் என கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று
    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
    தெரிவித்திருந்தார்.

    அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி


    இந்நிலையில்,  1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

    மாவட்ட கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட கருத்துக்கள் தொகுக்கப்பட்டு அறிக்கையாக அளிக்கப்பட்டுள்ளது.

    இதனிடையே 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.



    Next Story
    ×