என் மலர்

  செய்திகள்

  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
  X
  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

  உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை- ஜெயக்குமார் குற்றச்சாட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்பவே திமுக அரசு சோதனை நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டி உள்ளார்.
  சென்னை:

  அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர்  சோதனை நடத்தி வருகின்றனர்.

  கேசி வீரமணி

  இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:

  * உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்நோக்கத்துடன் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுகிறது.

  * அதிமுகவினர் தேர்தல் பணிகளில் ஈடுபடக்கூடாது என்பதற்காகவே சோதனை நடத்தப்படுகிறது.

  * தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை திசை திருப்ப திமுக அரசு சோதனை நடத்துகிறது.

  * லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

  இவ்வாறு அவர் கூறினார்.


  Next Story
  ×