search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 21-ந்தேதி சென்னை சென்டிரல்-கூடுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே மூத்த மக்கள் தொடர்பு அதிகாரி பி.குகனேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    * காரைக்குடி-சென்னை எழும்பூர் (வண்டி எண்: 02606) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டு-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-மதுரை (02635) இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் எழும்பூர்-செங்கல்பட்டு இடையிலும், மதுரை-எழும்பூர் (02636) எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம்-எழும்பூர் இடையிலும், எழும்பூர்-காரைக்குடி (02605) சிறப்பு ரெயில் எழும்பூர்-விழுப்புரம் இடையிலும் வருகிற 22-ந்தேதி மற்றும் 29-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை எம்.ஜி.ஆர் சென்டிரல்-விஜயவாடா (02712) பினாகினி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 21-ந்தேதி சென்னை சென்டிரல்-கூடுர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * சென்னை சென்டிரல்- மங்களூரு (06627) எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 21-ந்தேதி மற்றும் 28-ந்தேதிகளில் சென்டிரல்- ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    * விஜயவாடா-சென்டிரல் (02711) எஸ்க்பிரஸ் ரெயில் கூடூர்-சென்னை சென்டிரல் இடையே வருகிற 21-ந்தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×