search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற காட்சி.
    X
    மனித சங்கிலி போராட்டம் நடைபெற்ற காட்சி.

    திருப்பூரில் மனித சங்கிலி போராட்டம்

    திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை பேருந்து நிறுத்தம் முதல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
    திருப்பூர்:

    உலக ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு தினமான இன்று பா.ஜ.க. அரசை கண்டித்தும், பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். கொடூரமான ஊபா சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். 

    தேசிய புலனாய்வு முகமைக்கு அளிக்கப்பட்டுள்ள வரம்பற்ற அதிகாரங்களை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஒன்றிணைந்த பீமா கோரேகான் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டோர் விடுதலை இயக்கம் சார்பில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை பேருந்து நிறுத்தம் முதல், மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது. 

    இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மனித சங்கிலி போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. 
    Next Story
    ×