search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 19 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் - வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

    தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடந்தது. மாவட்டத்தில் 17 மாவட்ட கவுன்சிலர் வார்டு, 170 ஒன்றிய கவுன்சிலர் வார்டு, 265 ஊராட்சி தலைவர்கள், 2,495 ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடந்தது.

    தற்போது 19 ஊரக உள்ளாட்சி பதவிகள் காலியாக உள்ளன. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை அறிவித்துள்ளது. 

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 19 பதவிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடக்க உள்ளது.

    காங்கயம் ஒன்றியத்தில் உள்ள மாவட்ட ஊராட்சியின் 10வது வார்டு (பொது - பெண்), தாராபுரம் ஒன்றியத்தின் 12வது வார்டு (பொது) என கட்சி சின்னத்தில் போட்டியிடும் இரண்டு பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. 

    அவிநாசி ஒன்றியத்தில் கருவலூர் ஊராட்சி தலைவர் (எஸ்.சி., -பொது), மூலனூர் ஒன்றியம் எரிசனம்பாளையம் ஊராட்சி தலைவர் (எஸ்.சி.,- பெண்), உடுமலை ஒன்றியத்தில் ஆர்.வேலூர் ஊராட்சி தலைவர் (பொது -பெண்) ஆகிய பதவிகள் காலியாக உள்ளன.

    அவிநாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி 9-வது வார்டு (பொது), ராம நாத புரம் ஊராட்சி 2-வது வார்டு (பொது), தாராபுரம் ஒன்றியத்தில் பொன்னாபுரம் ஊராட்சியின் 1-வது வார்டு (பெண்).

    குடிமங்கலம் ஒன்றியம் ஆமந்தகடவு ஊராட்சியின் 5வது வார்டு (பெண்), காங்கயம் ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சியில் 5-வது வார்டு (பெண்), குண்டடம் ஒன்றியம்  எல்லப்பாளையம்புதூர் ஊராட்சியில் 8-வது வார்டு (பெண்), மூலனூர் ஒன்றியம் கருப்பன்வலசு ஊராட்சியில் 3-வது வார்டு பெண்.

    பல்லடம் ஒன்றியம் மாணிக்காபுரம் ஊராட்சியில் 5-வது வார்டு (பெண்), பணிக்கம்பட்டி ஊராட்சியில் 8-வது வார்டு (எஸ்.சி., - பொது), பொங்கலூர் ஒன்றியம் வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் 8-வது வார்டு (எஸ்.சி., - பொது), உகாயனூர் ஊராட்சியில் 5-வது வார்டு (எஸ்.சி., -பொது).

    ஊத்துக்குளி ஒன்றியம் கணபதிபாளையம் ஊராட்சி யில் 5-வது வார்டு (பொது), வடுகபாளையம் ஊராட்சியில் 4-வது வார்டு (பொது), வெள்ளகோவில் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் 1-வது வார்டு (பொது) என 19 பதவிகள் காலியாக உள்ளன.

    வார்டு உறுப்பினர் பதவிக்கு அந்தந்த ஊராட்சிகளில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் நடக்கிறது. 

    இன்று தொடங்கி வருகிற 22-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 23-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 25-ந்தேதி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். அக்டோபர் 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. 12-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  
    Next Story
    ×