search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தென்மேற்கு பருவகாற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை இன்று பெய்யும்.

    இதேபோல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் திருப்பூர், தென்காசி) மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளையும் (16-ந் தேதி), நாளை மறுநாளும் (17-ந் தேதி) தென் மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மழை

    18-ந் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், பெய்யும்.

    19-ந் தேதி தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், கட லோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் (கோவை) அதிகபட்சமாக 3 செ.மீ. மழை பதிவாகி இருந்தது.

    இன்று முதல் 16-ந் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×