search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாய ஆலை நிறுவனங்கள் கெமிக்கல் நிறுவனங்களுக்கு உரிய தொகையை 50 நாட்களுக்குள் வழங்க வேண்டுகோள்

    தொகை வழங்க தாமதித்தால் டைஸ் அண்ட் கெமிக்கல் வியாபாரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.
    திருப்பூர்:

    திருப்பூர் டைஸ் அண்ட் கெமிக்கல் வியாபாரிகள் சங்க 33வது மகாசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் வெளிமாநிலம், வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்து திருப்பூரில் சாயம், ரசாயனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 

    மூலப்பொருட்கள் விலை உயர்வால் சாயங்கள் விலையும் அதிகரித்துள்ளது. முன்பணம் செலுத்தினால் மட்டுமே சாயங்கள் வழங்குகின்றனர். 

    எனவே திருப்பூர் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள், டைஸ் அண்டு கெமிக்கல் நிறுவனங்களுக்கு உரிய தொகையை 15 முதல் 50 நாட்களுக்குள் வழங்கிவிட வேண்டும். தொகை வழங்க தாமதித்தால் டைஸ் அண்ட் கெமிக்கல் வியாபாரிகளுக்கு நிதிச்சுமை அதிகரிக்கும்.

    நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. புற நகர் பகுதிகளில் குடோன்கள் அமைத்து சாயம், ரசாயனங்களை இருப்பு வைக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    Next Story
    ×