search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக-அதிமுக
    X
    திமுக-அதிமுக

    உள்ளாட்சி தேர்தல்- கள்ளக்குறிச்சியில் தி.மு.க., அ.தி.மு.க.வினர் விருப்ப மனு

    பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 65 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

    இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் தங்களது வேட்பாளர்கள் தேர்வில் தீவிரமடைந்துள்ளனர். முன்னதாக விருப்ப மனு வாங்கப்பட்டு வருகிறது.

    கள்ளக்குறிச்சி ஒன்றியத்தை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட கட்சி அலுவலகத்தில் தெற்கு மாவட்ட தி.மு.க. பொருப்பாளரும், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் ஏற்கனவே விருப்ப மனுக்களை பெற்றுள்ளார்.

    தியாகத்துருகம் வடக்கு, தெற்கு ஒன்றியங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகளிடம் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. விருப்ப மனுக்களை வாங்கியுள்ளார். இந்த மனுக்கள் அனைத்தும் தலைமை கழகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

    உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு குறித்து அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் கூறுகையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் விருப்பமனு பெறப்பட்டுள்ளது. இந்த மனு குறித்து இன்று தலைமை கழகத்தில் முடிவு செய்யப்படும் என்றார்.

    கள்ளக்குறிச்சியில் 9 வட்டார காங்கிரஸ் தலைவர்கள் அந்தந்த பகுதியில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளிடம் மனுக்கள் பெற்றுள்ளனர். மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், மாநில செயலாளர் முனிஸ்வர்கணேசன் ஆகியோர் முன்னிலையில் விருப்பமனு பெறப்பட்டுள்ளது.

    பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 65 பேரும், யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 40 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 18 பேரும் விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளனர்.
    Next Story
    ×