search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்க்கப்பட்ட குழந்தை.
    X
    மீட்க்கப்பட்ட குழந்தை.

    திருப்பூர் ரெயில் நிலையம் அருகே அனாதையாக கிடந்த 9 மாத குழந்தையை மீட்ட போலீசார் - விட்டு சென்ற பெண்ணை தேடிவருகின்றனர்

    நீண்ட நேரம் குழந்தை அழுது கொண்டிருந்ததால் உடனடியாக அந்த குழந்தையை மீட்ட பொது மக்கள், திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலாவதியிடம் ஒப்படைத்தனர்.
    திருப்பூர்;

    திருப்பூர் ரெயில் நிலையம் எதிரே தலைமை தபால் நிலையம் உள்ளது. தபால் நிலையத்தின் முன் புறம் ஏ.டி.எம். மையம் அமைந்துள்ளது.

    இந்த ஏ.டி.எம். மையத்தின் படிக்கட்டில் நேற்று இரவு 9 மாத ஆண் குழந்தை அழுதபடி கிடந்தது. இதை அங்கிருந்தவர்கள் பார்த்து குழந்தையின் தாயை தேடினர். ஆனால் அங்கு யாரும் இல்லை. 

    நீண்ட நேரம் குழந்தை அழுது கொண்டிருந்ததால் உடனடியாக அந்த குழந்தையை மீட்ட பொது மக்கள், திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கலாவதியிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் குழந்தையின் தாயை தேடி பார்த்தனர். 

    அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த வீடியோ காட்சிகளை பார்த்த போது ஒரு பெண் அந்த குழந்தையை படிக்கட்டில் படுக்க வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த குழந்தையை திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    குழந்தையை விட்டுச் சென்றது தாயா? இல்லை வேறு பெண்ணா? என்று தெரியவில்லை. இன்று காலை வரை யாரும் குழந்தையை தேடி வரவில்லை. இதையடுத்து குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். 

    மேலும் குழந்தையை விட்டு சென்ற பெண் யார்? எதற்காக இங்கு விட்டு சென்றார்? திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் குழந்தை காணவில்லை என எதாவது புகார்கள் வந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து அந்த பெண்ணையும் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×