என் மலர்

  செய்திகள்

  அமைச்சர் மா சுப்பிரமணியன்
  X
  அமைச்சர் மா சுப்பிரமணியன்

  நீட் தேர்வு விலக்கு மசோதா கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 12-ந் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாம் போல வருகிற 17-ந் தேதியும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
  சென்னை:

  தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டமசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

  அதன்படி தமிழக சட்டசபையில் நேற்று நீட் தேர்வுக்கு எதிரான மசோதா கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு உள்ளது.

  இந்தநிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மசோதா கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

  இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா கவர்னருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

  ஆட்சிக்கு வந்து 24 மணி நேரத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. சொன்னதாக பொய் பிரசாரம் செய்கிறார்கள்.

  திமுக

  தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும், சட்டமன்ற முதல் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று சொன்னோம். நாங்கள் சொன்னதை செய்திருக்கிறோம்.

  சட்டசபையில் நீட் தேர்வுக்கு எதிராக அ.தி.மு.க. கொண்டு வந்த மசோதாவுக்கும், தி.மு.க. கொண்டு வந்துள்ள மசோதாவுக்கும் வித்தியாசம் உள்ளது.

  நீட் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு 86 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டது. அதன் அடிப்படையில் பின்தங்கிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் சட்ட நிபுணர்களின் கருத்துக்கள், உயர்மட்ட அதிகாரிகளின் கருத்துக்கள் இடம் பெற்று உள்ளன. களநிலவரம் நிச்சயமாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நிச்சயமாக ஜனாதிபதியும் புறந்தள்ளமாட்டார்.

  தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ள மசோதாவில் 86 ஆயிரம் பேர்களின் கருத்துக்கள், நீதிபதி ராஜன் கமிட்டியின் கருத்து போன்றவை இணைக்கப்பட்டு உள்ளன.

  கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் கடந்த 12-ந் தேதி நடந்த மெகா தடுப்பூசி முகாம் போல வருகிற 17-ந் தேதியும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.


  Next Story
  ×