search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விநாயகர் சிலைகள் தேக்கம் - தயாரிப்பாளர்கள் கவலை

    இந்தாண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து முன்பே சிலை தயாரிக்கும் பணி தொடங்கியது.
    திருப்பூர்:

    கடந்த 10-ந்தேதி விநாயகர்சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், ஊர்வலங்கள் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்தது. வீடுகளில் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்கப்பட்டது. இதன் காரணமாக பல இடங்களில் விநாயகர் சிலைகள் தேக்கமடைந்தன. 

    இதுகுறித்து பல்லடம் அடுத்த கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சிலை தயாரிப்பாளர் பாலாஜி கூறுகையில்:

    தொற்று பரவல் காரணமாக, கடந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்திக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. வழக்கமாக வரும் சிலை ஆர்டர்கள் குறைந்தன. இந்தாண்டு அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்த்து முன்பே சிலை தயாரிக்கும் பணி துவங்கியது.

    வழக்கமாக உயரமான சிலைகளே அதிகம் புக்கிங் செய்யப்படும். அரசு கட்டுப்பாடுகளால், உயரமான சிலைகளை யாரும் வாங்காததால் அவை தேக்கம் அடைந்தன. சிலை தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார்.
    Next Story
    ×