search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள்  உள்ளனர்
    X
    நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. அருகில் கலெக்டர் வினீத் மற்றும் அதிகாரிகள் உள்ளனர்

    கொரோனாவை கட்டுப்படுத்த அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்-அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேச்சு

    தாராபுரம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் அய்யம்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள அய்யம்பாளையத்தில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில், தாராபுரம் சப்-கலெக் டர் மோகன் ஆனந்த் முன்னிலையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர்   திட்டத்தின் கீழ் நலத் திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார்.

    விழாவில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நலத் திட்டத்தின் கீழ் வருவாய் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகை 41 நபர்களுக்கும், விதவை உதவித்தொகை 19 நபர் களுக்கும், ஊனமுற்றோர் உதவித்தொகை ஒருவருக்கும், இலவச வீட்டு மனை பட்டா 22 நபர்களுக்கும், புதிய குடும்ப அட்டை 29 நபர்களுக்கும் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு 15 லட்சத்து 32 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

     பிறகு தாராபுரம் வேளாண்மை உற்பத்தி யாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் அய்யம்பாளையத்தில் பகுதி நேர ரேஷன் கடையை திறந்து வைத்து ரேஷன் பொருட்கள் வழங்கினார். அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக திகழ்ந்து வருகிறார். அரசின் திட்டங்கள் கிராமம் தோறும் சென்றடைய ரேஷன் பொருட்கள் எளிதாக பொதுமக்களுக்கு போய் சேர இதுபோன்ற பகுதிநேர ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது ரேசன் பொருள் பெற ஒரு சில இடங்களில் கைரேகை பதிவு சம்பந்தமாக குறைபாடு இருப்பதாக கூறுகின்றனர். இதற்கு விரைவில் கலெக்டர் மூலமாக தீர்வு காணப்படும் என்றார்.

    தற்போது கொரோனா தொற்று 3-வது அலை யில் இருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் விழிப்பு ணர்வுடன் இருக்க வேண்டும்.  வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.  அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்  என்றார்.

    விழாவில் திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் இல. பத்மநாபன், வெள்ளகோவில் ஒன்றிய செயலாளர் மோளகவுண்டன்வலசு கே.சந்திரசேகர், பொதுக்குழு உறுப்பினர் எம்.எஸ்.மோகன செல்வம், வெள்ளகோவில் நகர செயலாளர் கே.ஆர். முத்துக்குமார், துணைச் செயலாளர் சபரி முருகானந்தம் மற்றும் காங்கேயம் தாசில்தார் சிவகாமி உட்பட கூட்டுறவுத்துறையினர், வருவாய் துறையினர், தி.மு.க. பிரமுகர்கள் கலந்துகொண்டனர், முடிவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் சண்முகவேல் நன்றி கூறினார்.
    Next Story
    ×