search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    நாளை நீட் தேர்வு-மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

    தேர்வு நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது.
    திருப்பூர்:

    மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு நாளை 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி சின்னக்கரை ஜெயந்தி மெட்ரிக் பள்ளி, அவினாசி டீ பப்ளிக் பள்ளி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, விஜயமங்கலம் சசூரி  என்ஜினீயரிங் கல்லூரி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, தாராபுரம் மஹாராணி கலை அறிவியல் கல்லூரி, - உடுமலை விசாலாட்சி மகளிர் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளி ஆகியன தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. 

    இந்த மையங்களில் 3,200 பேர் தேர்வு எழுதுவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தேர்வு நடக்கும் மையங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதனை மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பு குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு நாளை மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. மாணவ-மாணவிகள் காலை 11.30 மணி முதல் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு அறைக்கு 12 பேர் அமர வைக்கப்பட்டு தேர்வு எழுத உள்ளனர். 

    ஆபரணங்கள், லெக்கின்ஸ், ஜீன்ஸ் உடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. மதம் மற்றும் சமூக பழக்கவழக்கம் சார்ந்த ஆடை அணிந்துள்ள தேர்வர்களுக்கு முன்கூட்டியே கட்டாய சோதனை செய்து பின் அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு மையங்களுக்குள் ஹால்டிக்கெட், புகைப்படம், ஆதார் அட்டை, தண்ணீர்பாட்டில், முககவசம், கையுறை ஆகியவை மட்டுமே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் .
    Next Story
    ×