search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புழல் ஏரி
    X
    புழல் ஏரி

    சென்னை குடிநீர் ஏரிகளில் செப்டம்பர் மாதத்தில் 10 டி.எம்.சி. தண்ணீர்

    வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
    சென்னை:

    சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரிகளாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், மற்றும் கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரி உள்ளது. இந்த 5 ஏரிகளிலும் 12 ஆயிரத்து 722 மில்லியன் கனஅடி (12.722 டி.எம்.சி.) தண்ணீரை சேமித்து வைத்துகொள்ளலாம். கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி பூண்டி ஏரிக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் 2 ஏரிகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

    இதேபோல் வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 421 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக வீராணம் ஏரியின் மட்டம் 46.90 அடியாக உயர்ந்துள்ளது. இந்த ஏரியின் உயரம் 47.50 அடியாகும். இங்கிருந்து சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 61 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாகவும் ஏரிகளுக்கு தண்ணீர் வருகிறது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் 10 ஆயிரத்து 757 மில்லியன் கனஅடி அதாவது 10.757 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

    இது கடந்த 10 ஆண்டுகளில் செப்டம்பர் மாதத்தில் இல்லாத அளவாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் குடிநீர் ஏரிகளில் 5.725 மில்லியன் கன அடி அதாவது 5.725 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருந்தது.

    கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 8 ஆயிரத்து 002 மில்லியன் கன அடி அதாவது 8.002 டி.எம்.சி. தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.



    Next Story
    ×