search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பூரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.
    X
    திருப்பூரில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை படத்தில் காணலாம்.

    கோவில்களில் சிறப்பு பூஜை-வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட பொதுமக்கள்

    விநாயகருக்கு பிடித்த பால் கொழுக்கட்டை, அவல், பொறி படைத்து, குழந்தைகளோடு வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர்.
    திருப்பூர்:

    கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளுடன் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பொதுஇடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவதை தவிர்த்து பொதுமக்கள் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து ஆர்வமுடன் வழிபட்டனர்.  இதற்காக 2 நாட்களுக்கு முன்பே தயாராகி விட்டனர்.

    வீடுகளை சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்து விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்திருந்தனர். இன்று காலையில் விநாயகருக்கு பிடித்த பால் கொழுக்கட்டை, அவல், பொறி படைத்து, குழந்தைகளோடு வழிபாடு நடத்தி மகிழ்ந்தனர்.

    மேலும் கோவில்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு  வழிபாடுகள் நடத்தப்பட்டது. சிறிய மற்றும் பெரிய சிலைகளை கோவில் வளாகத்திற்குள் பிரதிஷ்டை செய்து வண்ணமாலைகளால் அலங்கரித்து, விநாயகருக்கு இஷ்ட பொருட்களை வைத்து அதிகாலையிலேயே கணபதி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனால் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஆனால் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்கள் மூடப்பட்டதால் அங்கு பக்தர்கள் வெளியில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர். புதிய தொழில் தொடங்குபவர்கள், புதிய வாகனங்கள் எடுத்தவர்கள், சுபகாரியங்கள் நடத்த இருப்பவர்கள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தி விநாயகரை வழிபட்டனர். 

    உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.  இதேபோல் உடுமலை குட்டை திடலில் உள்ள ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து கோவில்களுக்க வந்தனர். அவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தமாக கழுவ அறிவுறுத்தபட்டது. தொடர்ந்து கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு கொழுக்கட்டை, அவல், பொறி வழங்கப்பட்டது.
    Next Story
    ×