search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்.
    X
    கோப்புபடம்.

    திருப்பூரில் நீட் தேர்வு மையங்கள் ஆய்வு

    சமூக இடைவெளியுடன் தேர்வர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதா? தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
     திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு எழுத 3 ஆயிரத்து 28 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

    இவர்கள் தேர்வு எழுதுவதற்கான மையங்கள் வெகு தொலைவில் அமைக்கபட்டு வந்தநிலையில் நடப்பாண்டு திருப்பூரில் 8 மையங்களில் நீட் நுழைவு தேர்வு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    அந்தவகையில் மாவட்டத்தில் சின்னக்கரை ஜெயந்தி மெட்ரிக் பள்ளி, அவினாசி டீ பப்ளிக் பள்ளி, சோளிபாளையம் லிட்டில் கிங்டம் பள்ளி, விஜயமங்கலம் சசூரி இன்ஜினியரிங் கல்லூரி, திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., கலை அறிவியல் கல்லூரி, தாராபுரம் மஹாராணி கலை அறிவியல் கல்லூரி, - உடுமலை விசாலாட்சி மகளிர் கல்லூரி, கூலிபாளையம் வித்யாசாகர் பப்ளிக் பள்ளி ஆகியன தேர்வு மையங்களாக தேர்வு செய்யப்பட்டு அதற்கான தயார்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    நாளை மறுநாள் (12-ந்தேதி) தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாவட்ட ‘நீட்’ தேர்வு ஒருங்கிணைப்பு குழு தலைவர் கே.எம்.சி., பப்ளிக் பள்ளி தாளாளர் மனோகரன் தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

    மையங்கள் அமைக்கப்பட்ட பள்ளி, கல்லூரி வளாகத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளதா? சமூக இடைவெளியுடன் தேர்வர்களுக்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளதா? தேர்வு எழுத வரும் மாணவர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்களுடன் ஆலோசிக்கப்பட்டது.
    Next Story
    ×