search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மளிகை தொகுப்புகளை வழங்கிய அதிகாரிகள்.
    X
    மளிகை தொகுப்புகளை வழங்கிய அதிகாரிகள்.

    ரேஷன் கடைகளில் மீதமிருந்த மளிகை தொகுப்புகளை காப்பகங்களுக்கு வழங்கி வரும் அதிகாரிகள்

    கலெக்டரின் உத்தரவுப்படி பல்லடம் வட்டாரத்திலுள்ள முதியோர் காப்பகங்கள், ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.
    பல்லடம்:

    தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது.  

    இந்நிலையில் பொதுமக்கள் நலனுக்காக அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.4 ஆயிரம் நிவாரண உதவி  மற்றும் ஒவ்வொரு  குடும்பத்துக்கும் சர்க்கரை, உளுத்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, கடுகு, மஞ்சள்தூள், டீ தூள்,  குளியல் சோப்பு உள்ளிட்ட 14 விதமான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.

    இந்தநிலையில் பல்லடம் வட்டாரத்திலுள்ள ரேஷன் கடைகளில் பொதுமக்கள் வாங்காமல் மீதமாக இருந்த மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் திரும்பப் பெறப்பட்டு  கலெக்டரின் உத்தரவுப்படி பல்லடம் வட்டாரத்திலுள்ள முதியோர் காப்பகங்கள், ஆதரவற்றோர் காப்பகங்களுக்கு வழங்கப்பட்டது.

    இந்த பணிகளை கூட்டுறவு சார்பதிவாளர் சுரேஷ்குமார் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×