search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசைத்தறி கூடங்கள்.
    X
    விசைத்தறி கூடங்கள்.

    4 ம் கட்ட பேச்சுவார்த்தை - விசைத்தறியாளர்கள் பிரச்சினை முடிவுக்கு வருமா?

    ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால் கூலி உயர்வு பேச்சு மீண்டும் மீண்டும் இழுபறியில் உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் விசைத்தறிதொழில் பிரதானமாக உள்ளது. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த 2014 ம் ஆண்டிலிருந்து ஏழு ஆண்டாக விசைத்தறி கூலி உயர்வு ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை.

    இது தொடர்பாக விசைத்தறியாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    அந்த வகையில் மூன்று கட்ட பேச்சு வார்த்தையில் எதிர்பார்த்த அளவு ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால் கூலி உயர்வு பேச்சு மீண்டும் மீண்டும் இழுபறியில் உள்ளது.

    இந்தநிலையில் கூலி பிரச்சனைக்கு தீர்வு காண கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்து இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த விசைத்தறி கூட்டு கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டது.

    இதையடுத்து வருகிற 14-ந்தேதி இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்த இரு தரப்பினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    பேச்சுவார்த்தையில், ஜவுளி உற்பத்தியாளர்களை அவசியம் பங்கேற்க செய்வதுடன், கூலி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என விசைத்தறியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    Next Story
    ×