search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குழாய் உடைந்து குளம் போல் பெருகி கிடக்கும் குடிநீர்.
    X
    குழாய் உடைந்து குளம் போல் பெருகி கிடக்கும் குடிநீர்.

    திருமூர்த்தி அணை பகுதியில் குழாய் உடைந்து குளம் போல் தேங்கும் குடிநீர்

    ஒரு புறம் தண்ணீர் தினமும் வீணாகி வரும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மறுபுறம் வாடும் நிலை ஏற்படுகிறது.
    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் உடுமலை நகரம், கணக்கம்பாளையம், பூலாங்கிணறு, குடிமங்கலம் பகுதி மற்றும் மடத்துக்குளம் உள்ளிட்ட 4 பேரூராட்சிகள் 11 ஊராட்சிகள் இதன் மூலம் பயனடைகின்றன.

    இந்தநிலையில் திருமூர்த்தி அணை சாம்பல் மேடு அருகே குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. அப்பகுதியில் அடர்ந்த செடிகள் வளர்ந்திருப்பதால் குடிநீர் வீணாகி வருவது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.

    கடந்த சில நாட்களில் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அதிலிருந்து வீணாகும் தண்ணீர் குளம்போல் பெருக்கெடுத்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதேபோல் தளிவாளவாடி உள்ளிட்ட இடங்களிலும் குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது.

    ஒரு புறம் தண்ணீர் தினமும் வீணாகி வரும் நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மறுபுறம் வாடும் நிலை ஏற்படுகிறது.

    இதனால் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கசிவு ஏற்படும் இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு குடிதண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். இதுதொடர்பாக பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×