search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    திருத்துறைப்பூண்டியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார்.சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் ரமேஷ், முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தில், விடுபட்ட சாலையோர வியாபாரிகளை கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க வேண்டும். 2020-ம் ஆண்டு அடையாள அட்டை செல்லுபடியாகும் காலம் முடிந்ததும் அவர்களுக்கு அடையாள அட்டை புதுப்பித்து தர வேண்டும். கந்து வட்டி கொடுமையில் இருந்து மீள சாலையோர வியாபாரிகளுக்கு கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வழங்க வேண்டும். கோவில் திருவிழா காலங்களில் விதிமுறைகளை பின்பற்றி கடை வைப்பதற்கு அனுமதி மறுக்காமல் அனுமதி தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகையன், விளக்கி பேசினார். இதில் தொழிற்சங்க மாவட்ட பொருளாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் ரகுபதி முறைசாரா தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×