search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.
    X
    சாலையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்.

    நாளை விநாயகர் சதுர்த்தி விழா- தலைவர்கள் வாழ்த்து

    உலகெங்கும் விநாயகர் சதுர்த்தியினை சிறப்பாக கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகள் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

    தெலுங்கானா கவர்னர் மற்றும் புதுச்சேரி துணை நிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்:-

    விநாயகர் வினைகளைத் தீர்ப்பவர் வெற்றிகளைத் தருபவர். விநாயகர் எளிமையான கடவுள், எளியவர்களின் வேண்டுதலுக்கு செவி சாய்க்கக்கூடிய இறைவன்.

    புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி விழாவை பொது வெளியில் கொண்டாட புதுச்சேரி அரசு கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்திருக்கும் நிலையில் அண்டை மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மக்கள் அனைவரும் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடித்து, முகக்கவசம் அணிந்து, கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியை பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.

    அ.தி.மு.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-

    வினை தீர்க்கும் தெய்வமான விநாயக பெருமான் அவதரித்த திருநாளான ‘விநாயகர் சதுர்த்தி’ திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எங்களது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    மக்கள் நற்காரியங்களை தொடங்கும் போது தங்கு தடையின்றி சிறப்புடன் நடைபெற விநாயகப் பெருமானை முதலில் போற்றி வணங்குவர். விநாயகரை துதித்து நற்காரியங்களை மேற்கொண்டால் வெற்றியே விளையும் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கையாகும்.

    ஞானமே வடிவான திருமேனியைக் கொண்ட விநாயக பெருமானின் திருவருளால் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிறையட்டும். நாடெங்கும் நலமும், வளமும் பெருகட்டும். வீடெங்கும் மகிழ்ச்சியும், மன நிம்மதியும் தவழட்டும் என்று வாழ்த்தி, விநாயகர் சதுர்த்தி திருநாளை விமரிசையாக கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது வழியில் ‘விநாயகர் சதுர்த்தி’ நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை அன்போடு உரித்தாக்கிக்கொள்கிறோம்.

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    முழு முதற்கடவுளான விநாயகப்பெருமான் அவதரித்த நாளை விநாயகர் சதுர்த்தி
    யாக கொண்டாடும் அனைவருக்கும் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த நன்னாளில் விநாயகரின் அருளால் அனைவருக்கும் துன்பங்கள் அகன்று, வளமும் நலமும் பெருகட்டும். அமைதியும் அன்பும் உலகில் தழைத் தோங்கட்டும் என மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    விநாயகர் சிலை வாங்கி செல்லும் பெண்.

    வெற்றியை அருளும் விநாயகர், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு, துவங்கும் தொழில்கள் வெற்றியடையவும், செய்யும் தொழில்கள் பல்கி பெருகி லாபம் ஈட்டவும், எடுத்த செயல்கள் தடைகள் இன்றி நிறைவேறவும் அருள் புரியட்டும் என பிரார்த்திக்கிறேன்.

    உலகெங்கும் விநாயகர் சதுர்த்தியினை சிறப்பாக கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு:-

    விநாயகர் இந்தியாவில் இருக்கும் கடவுள்களில் மிகவும் அழகானவர். அவருடைய அன்பான தன்மையாலும் குணத்தாலும் அவர் உலகம் முழுவதும் வணங்கப்படுகிறார். இந்தியாவிலும் உலகின் பல பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி ஒரு முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

    அந்த பண்டிகையின் போது, நாம் வணங்கும் விநாயகர் சிலைகளை மண், சிறுதானியம், மஞ்சள் போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்க வேண்டும்.

    நம் கலாசாரத்தை பாதுகாப்பதற்கும் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கும் இதுவே சிறந்த வழி.

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன்:-

    இந்துக்கள் பண்டிகைகளில் முக்கியமானது விநாயகர் சதுர்த்தி. ஆண்டு தோறும் தமிழகத்தில் விமரிசையாக ஆவணி மாதம் வளர்பிற சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.

    தனிநபர்கள் வழிபடும் நெறிமுறைகளை பின்பற்றி தங்கள் இல்லத்தில் கொண்டாடலாம் என அரசு கூறும் நிலையில் நாமும் அரசு கூறும்முறைப்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாடலாம். உலகில் வாழும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் தமிழர்கள் அனை ருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா உள்பட பல்வேறு தலைவர்கள் விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.


    Next Story
    ×